அச்சக அதிபர் வீட்டில் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கருப்பண்ணன் வீதியில் பழனிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அச்சக அதிபராக இருக்கின்றார். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் அச்சகம் நடத்தி வருகின்றார். இதனயடுத்து கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினருடன் மதுரைக்குச் சென்றவிட்டு பின் அங்கிருந்து நாகர்கோவில் சென்றதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பழனிக்குமார் மீண்டும் குடும்பத்தினருடன் சிவகாசி திரும்பியபோது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 45 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பழனிகுமார் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். எனவே திருட்டு சம்பவம் நடந்த வீடு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா இருக்கிறதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.