Categories
மாநில செய்திகள்

பிரபல இயக்குனர் தான் இந்து மத பாதுகாவலர்…. விருது அறிவித்த நித்தியானந்தா….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தா. ஆனால் இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பிரதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கதவை திற காற்று வரட்டும் என்ற ஆன்மீக கட்டுரை மூலம் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையில் பெண் சீடர்களுக்கு மட்டுமில்லாமல் ஆண் சீடர்களுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றசாட்டுகள் நித்யானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதனால் நித்தியானந்தா தலைமுறைவானார். இந்தியாவை விட்டு நித்தியானந்தா வெளியேறியதாக கூறப்படும் நிலையில், அவர் எங்கு இருக்கிறார்? என்பதை புலனாய் நிறுவனங்களால் ‌கூட கண்டு பிடிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் நித்தியானந்தா கைலாசம் என்ற தனித்தீவை உருவாக்கி, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எவரும் கைலாச நாட்டின் குடிமகன் ஆகலாம் என்று கூறி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தனது பக்தர்களுக்கு அடிக்கடி சமூக வலைதளங்கள் மூலம் நேரலையாக தோன்றி நித்தியானந்தா ஆன்மீக உரையாற்றி வருகிறார். இது ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும் சர்வதேச போலீஸ் உதவியுடன் கூட அவரை பிடிக்க முடியவில்லை என்று போலீசாரை கூறுவது வேடிக்கையாக உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பேரரசுக்கு விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இயக்குனர் பேரரசின் ஆன்மீக பணிக்காக இருந்து கைலாசவில் இருந்து ‘கைலாச தர்ம ரட்சகா’ விருது வழங்கப்படும் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இயக்குனர் பேரரசு ஆதரவாக என்றும் நானும் கைலாசமும் இருப்போம். அவரது ஆன்மிக பணிகள் தொடர வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் நித்தியானந்தாவை பிடிக்க முடியுமா? முடியாதா? அவரது இருப்பிடம் போலீசருக்கு தெரியுமா? போன்ற பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |