பிசாசு 2 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் மற்ற இயக்குனர்களை போல் இல்லாமல் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி அதன் மூலம் படங்களை உருவாக்கி வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணத்தினால் படத்தில் இருந்து விலகினார். தற்பொழுது ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு 2’ படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற 4 மொழிகளில் வெளியாக உள்ளது. ராக்போர்ட் என்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் இணையதளங்களில் பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குளியல் தொட்டியில் ரத்தம் படிந்து கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்துக் கொண்டு கையில் சிகரெட்டை பிடித்திருப்பதை போன்ற புகைப்படம் வெளியானது.
இந்த நிலையில் பிசாசு 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணி அளவில் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.