மீனம் ராசி அன்பர்கள்..!! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய பணி அனைத்திலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கையில் வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தியை கொடுக்கும். பொது வாழ்வில் ஏற்பட்ட அவப்பெயர் அகலும். பாகபிரிவினைகள் சுமூகமாக முடியும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுடைய சொல்லிற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும்.
இன்று எந்த ஒரு முயற்சியிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். வெற்றி வீடு தேடி வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று உங்களுடைய சுய சிந்தனையால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும் மதிப்பும் உயரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். அது மட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்