மீனம் ராசி அன்பர்களே….!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு உண்டாகும். இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்றுவிடுவது நல்லது. யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது இன்று நீங்கள் கவனமாகத்தான் இருக்க வேண்டும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தை இன்று பாதுகாத்திடுங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.
மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிகவும் கவனமாக இருங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இன்று நீங்கள் மிகவும் கவனமாக தான் ஈடுபடவேண்டும். பார்த்துக்கொள்ளுங்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாமலிருப்பது இன்று மிகப் பெரிய விஷயம். அதை கவனத்தில் கொள்ளுங்கள். மாணவர்கள் கொஞ்சம் கடினப்பட்டு தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். சிரமப்பட்டு படிங்கள் சிறப்பாக இருப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு உடன் வாழலாம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்