Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… “அவசர பணி தொந்தரவு”.. செல்வாக்கு ஓங்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!!  சில அவசர பணிகள் உருவாகி உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம்.  அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம்.  தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி புரிவது அவசியம்.  பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும்.  மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி வேண்டும். செல்வாக்கு இன்று ஓங்கும் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும் தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும்.

மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்.  பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும் நல்ல வரன் அமையும்.  வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய சூழலும் இருக்கும்.  தொலைதூரத் தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.  செயல்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அனைவரின் ஆதரவும் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் நீங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யோகமும் இன்னிக்கு இருக்கும்.  இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷடத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள்.  உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷடமான திசை : மேற்கு

அதிர்ஷட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |