Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…கடன் வசதி கிடைக்கும்…மரியாதை கூடும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அணிய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபமே உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதியும் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள்.

காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். சிக்கனமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். மற்றவரிடம் உரையாடும் பொழுது மட்டும் வாக்குவாதங்கள் இல்லாமல் உரையாடுங்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அதேபோல மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். காதலர்கள் எந்த விதத்திலும் வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அதே போல இருக்கக் கூடிய சூழ்நிலையில் புதிதாக கடன் வாங்க வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு ஓரளவு முன்னேறுவதற்கு பாருங்கள்.

கூடுமானவரை புதிய முயற்சிகளை கண்டிப்பாக தள்ளிப் போடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |