Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதுவில் பிசு பிசு பொருள்….. தரமற்ற மது….. அதிக விலை…. விரக்தியில் நாகை குடிமகன்கள்…!!

நாகப்பட்டினத்தில் தரமற்ற மதுபானங்களை விற்பதாக அப்பகுதி குடிமகன்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் கோல்டன் சாய்ஸ் என்ற டீலக்ஸ் பிராந்தியை வாங்கியுள்ளார்.இதையடுத்து, அந்த பிராந்தியை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபான பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசை போன்று ஒருபொருள் ஒட்டியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

Image result for தரமற்ற மது

பின்னர் அவர் அந்த மதுபானத்தை திறக்காமல் வைத்துள்ளார். மேலும் அவர் அரசு மதுபானக்கடைகளில் பிராந்தி, விஷ்கி, ரம் உள்ளிட்ட மதுபான பாட்டில் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, கூடுதலாக 5 ரூபாயும், பீர் மதுபானத்திற்கு 10 ரூபாயும் பெறுவதாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘பணம் கொடுத்து மதுபானம் வாங்கியும் தரமற்ற முறையில் உடலுக்கு மிகவும் தீங்கு ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்’ என்றும் குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |