மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாகவே பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும். இன்று நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும்.
வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்புக்கள் இருக்காது. இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். அனைத்து விஷயங்களும் நீங்கள் எதிர்பார்த்தது போல் எளிமையாகவே நடந்து முடியும். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். பிற மொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்