மீன ராசி அன்பர்களே…! இன்று சுபசெலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் இருக்கும். அரசியல் ஈடுபாடு அனுபவத்தை கொடுக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமாக அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில்துறை இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாக இருப்பார்கள். வங்கிப் பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
பண பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி சிறப்பை கொடுப்பதாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புதிதாக காதலில் வயபடக் கூடிய சூழலும் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகளும், குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்லபடியாகவே நடக்கும்.
காதலர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.