Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…அந்தஸ்து உயரும்…வாக்குறுதிகளை தவிர்க்கவும்…!

மீன ராசி அன்பர்களே..!   இன்று முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு வழியில் உங்களுக்கு ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு கிடைத்து அதன்மூலம் நல்ல முன்னேற்றமும் அந்தஸ்தும் உயரும். சில விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் போது கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையை கடைபிடியுங்கள். உங்களுடைய உழைப்பிற்கு இன்று அளவான  ஊதியம் தான் வந்து சேரும்.இன்று யாருக்கும் வாக்கு, உதவிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். மாற்றங்களுக்காக தயவுசெய்து பரிந்து பேச வேண்டாம்.

மற்றவர் பிரச்சினைகளிலும் தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம். கூடுமானவரை இறைவழிபாடுடன் இன்றைய நாளை நீங்கள் தொடங்குங்கள் ஓரளவு கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று இருக்கும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்ல வேண்டும். யாருக்குமே நீங்க வாக்குறுதி ஏதும் கொடுக்க வேண்டாம். சுப காரியத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும்.திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஓரளவே சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆடை ஆபரணங்களைக் கொஞ்சம் கவனமாக இருங்கள்.விருந்தினர் வருகை இருக்கும் செலவு கூடும்.

கணவர் மனைவிக்கிடையே நெருக்கம் இருந்தாலும் ஏதோ ஒரு குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். ஆகையால் எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். உங்களுடைய முன்கோபம் மட்டும்தான் இன்று பிரச்சனையாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை .

Categories

Tech |