மீனம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடு அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றுங்கள். இன்று செலவு கொஞ்சம் அதிகரிக்கும். எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக இருக்கும்.
முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கின் மூலம் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும் மனம் தைரியம் கூடும், வசீகரம் கூடும். திருமண முயற்சி கைகூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்து விஷயங்களுமே சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரொம்ப மகிழ்ச்சியாக இன்று காணப்படுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்