உயர்வான எண்ணம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரம் சம்பந்தமாக அதிகாரிகளின் சந்திப்பு இனிதாக அமையாது. உடல்நிலையில் கவனம் வேண்டும். வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும். எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருக்கும். இப்படி நடந்து விடுமோ அல்லது அப்படி நடந்து விடுமோ என்று மனதில் தேவையில்லாத குழப்பம் பயம் இருந்து கொண்டே இருக்கும். இன்றும் மற்றவர்களுடைய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். இன்று தேவையான உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் இருக்கட்டும். லாபம் இன்று உயரும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். அதற்காக எந்த ஒரு விஷயத்திற்கும் நீங்கள் பயப்படாதீர்கள். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கலைத் தவிர்க்கலாம்.
சின்ன சின்ன செலவுகளை சந்திக்க நேரிடும். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்பொழுதும் போலவே மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். மன தைரியத்தால் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள். ஆகையால் இன்று நீங்கள் பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான பணியை செய்யும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய வாழ்க்கையில் செல்வம் வந்து சேரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்