தனது தெளிவான பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களில் சுறுசுறுப்பு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் புத்துணர்ச்சி பெருகும். இன்று நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களும் முன்னேற்றமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் வேலை சுமை கொஞ்சம் இருக்கும். நன்மைகள் அனைத்துமே உங்களுக்கு இன்று கிடைக்கும். காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அந்த செய்தி உங்களுக்கு மனதை மகிழ்விக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் மனக்கவலை மட்டும் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். நீங்கள் யாருக்கும் இன்று பஞ்சாயத்துக்கள் பண்ண வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாக்கு வன்மையால் நல்ல காரியங்கள் இனிதே நடக்கும். இன்று ஓரளவு மனம் அலை பாய கூடிய சூழலும் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீபஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், மனக் கஷ்டங்களையும் துன்பத்தையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருங்கள். அது போதும். முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்