மீனம் ராசி அன்பர்களே..!! உங்கள் மனதில் அன்பும் கருணையும் இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கையில் வளமும் பலமும் பெறுவீர் கள். உபரி பணவரவில் குடும்பத்தில் அத்தியாவசியத் தேவை நிறைவேற்றுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் மட்டும் இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பாக செல்லுங்கள். அதாவது பொருட்கள் மீதும் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடினமாக உழைப்பீர்கள். கஷ்டமாக பாடங்களை எல்லாம் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் இன்று கூடுதலாகவே இருக்கும். தேவையான பண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்று பொறுமையை கையாளுங்கள். குடும்பத்தாருடன் நீங்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் ஒற்றுமையுடன் சில முக்கியமான பணியையும் நிறைவேற்றுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். காரியத்தில் வெற்றி வாய்ப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்