மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களின் உதவிக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வது தொழிலில் சில மாற்றங்களை செய்யும். எண்ணம் மேலோங்கும். இன்று பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகத்தான் இருக்கும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருங்கள். அது போதும். அக்கம்பக்கத்தினர் இடம் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படகூடும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் பொழுது கவனமாக ஈடுபடுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது போலவே நீண்ட நாட்களாக வரவேண்டிய தொகை உங்களுக்கு வந்து சேரும். இன்று பணப்புழக்கம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இன்று கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடையுடன் செல்லுங்கள். அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும். இல்லையேல் வெள்ளை நிறத்தில் கைக்குட்டையாவது எடுத்து செல்லுங்கள். அதேபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்