மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென்று சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். பால்ய நண்பர்களை சந்திக்க கூடும். வருமானம் போதுமானதாக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கும். அதனால் வாக்குவாதம் போன்றவை ஏற்படக்கூடும். எப்பொழுதுமே மீன ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும்.
இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது எப்பொழுதுமே நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும். வீண் கவலை அவ்வப்போது மனதில் வந்து செல்லும்.தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு முயற்சியும் நீங்கள் தயக்கமின்றி செய்வீர்கள். நட்பு வட்டம் பெருகும். நண்பர்களால் உங்களுக்கு பணியும் சிறப்பாக நிறைவேறும்.
இன்று எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல சிறப்பை பெறமுடியும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை சொல்லுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு சாதத்தை வையுங்கள். உங்களுடை ய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்