Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “இன்று வெற்றி பெறும் நாள்”… துணிந்து காரியத்தை செய்வீர்கள்.!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தைப் பற்றிய பிரச்சினைகள் ஏதுமின்றி தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கிய மேம்பாட்டினால் மருத்துவ செலவுகள் ஏதும் இருக்காது. அதனால் மனம் மகிழும். உங்களுடைய வாக்கு வன்மையால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களிடம் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வீர்கள். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். துணிந்து காரியத்தை செய்வீர்கள். துணிச்சலாகவும் சில காரியங்களை எதிர்கொள்வீர்கள். அதேபோலவே பழைய கடன்கள் அடைபடும். கடன் பிரச்சினைகள் இன்று உங்களுக்கு இருக்காது.

ஆனால் மிக முக்கியமாக பணத்தேவை இருக்காது. இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைவரையும் கவரும் விதமாக நடந்து கொள்வீர்கள். அதுமட்டுமில்லை இன்று உங்கள் உடல் வசீகரம் பெறும். காதலில்  வயப்பட கூடிய சூழலும் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். இருந்தாலும் இன்று நீங்கள் முக்கியமான பணியைச் செய்யும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே இன்று விநாயகரையும் வழிபட்டு இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |