Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “தாயின் உடல்நிலையில் கவனம்”… மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் நீங்கள் முன்னர் கேட்ட உதவி இப்போது கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.. நல்ல முன்னேற்றத்தை பெரும். பண வரவும் நன்மையை கொடுக்கும். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான திட்டங்களையும்  தீட்டுவீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். அவ்வப்போது மனதில் மட்டும் சின்னதாக குழப்பம் இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருங்கள்.

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புக்களை மற்றவரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனமாக இருங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கலகலப்பும் இருக்கும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. உங்களின் அன்பை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். அக்கம்பக்கத்தார் உடன் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய வசீகரப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டியிருக்கும்.

பாடங்களை சரியாக புரிந்து கொண்டு படியுங்கள். பாடங்கள் புரியவில்லை என்றால் சந்தேகம் ஏதேனும் இருப்பின் உடனடியாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று முக்கிய பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |