Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “பொறுமையாக செயல்படுங்கள்”… மனம் மகிழ்வாகவே இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. கூடுமானவரை பொறுமையாக செயல்படுங்கள். மனைவி மூலம் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் எதிர்பாராத வகையில் பகை ஏற்படும். இன்று எல்லா பிரச்சனைகளும் ஓரளவு சரியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்கும். சாமர்த்தியமாக செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும்.

சில நேரத்தில் இடம் பொருள் தெரியாமல் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைத் துறையை  சார்ந்தவர்களுக்கு ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்க்கு ஏற்றவாறு கூடுதல் வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். இன்று மனம் மகிழ்வாகவே இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

உங்களுடைய மனமும் அமைதியாக இருக்கும். அதுபோலவே வாகன பழுது கொஞ்சம் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |