மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெறுவதற்கு அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். இன்று கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கப்பெற்று முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும்.
இன்று சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்றவை சிறப்பாக அமையும். விஐபிக்களின் சந்திப்புகள் கிட்டும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். தூர தேசத்து நண்பர்கள் மூலம் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை இன்று அடையக்கூடும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்காக கடுமையாக முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆரோக்கியமான சூழ்நிலையை அடையக்கூடும். சக மாணவரிடம் ஒற்றுமையை மட்டும் பேணுவது மிகவும் நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே சிறப்பான அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று மிகவும் முக்கியமாக வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையாக செல்லுங்கள் அது போதும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்