Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “விருந்தினர் வருகை இருக்கும்”.. அடுத்தவரை நம்ப வேண்டாம்.!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழிலை விரிவு படுத்த தொகை வந்து சேரும் நாளாக இருக்கும். நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கை நடைபெறும். விருந்தினர் வருகை இருக்கும். இடம் வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனையே கொடுக்கும். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். அடுத்தவரை நம்பி மட்டும் எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். அது போலவே கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். யாருக்கும் எந்தவிதமான ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று விளையாட்டில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கலை துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க பெற்று மனமகிழும். மற்றவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கூடுமானவரை பயணங்களின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். முடிந்தால் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அது போலவே வாகனத்தில் செல்லும் பொழுதும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள்.

குபேரர் பூமிக்கு வந்து திரு. அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்மளுடைய ஏழு தலைமுறைக்கு செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். கூடுமானவரை நாம் இன்று கிரிவலம் செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30க்குள்  குபேரர் வழிபாட்டையும் அண்ணாமலையாரையும் மனதார நினைத்து வழிபட்டு உங்களுடைய செல்வ நிலையை பெருக்கிக் கொள்வது மிகவும் சிறப்பு. தயவு செய்து இந்த வாய்ப்பை மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை

Categories

Tech |