Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “மனதில் தைரியம் கூடும்”.. நட்பு வட்டம் விரிவடையும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். மனதில் தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும்  நீங்கள் சமாளிக்க கூடிய திறமை உங்களிடம் வெளிப்படும். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம்.

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரியிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். உயர் பதவிகளும் கிடைக்கக்கூடும்.

சம்பள உயர்வு போன்ற செய்திகளையும் நீங்கள் கேட்கக் கூடும். இன்றையநாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மட்டும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பானதாக ஆக்கி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |