மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதற்கு கூடுதலாக மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். இன்று மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். கூடுமானவரை கவனத்துடன் பாடங்களை படியுங்கள். குழந்தைகள் நலன் ஓரளவு சிறப்பாக இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பும் இன்று இருக்கும்.
ஒரு சில நேரங்களில் மனம் கொஞ்சம் அலைபாயக்கூடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை நிதானமாக மேற்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். எதையும் பொறுமையாக கையாளுங்கள். கூடுமானவரை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். அதுபோலவே உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் கொஞ்சம் மேலதிகாரியிடம் கடுமையை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள்.
பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். இன்று குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்