மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் திறமை பளிச்சிடும். நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகு அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். மன தைரியம் கூடும்.
வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கூடுமானவரை இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சக மாணவர்களின் அன்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்