மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்யாதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்குமே நகை பணம் வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகவும் இன்று இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அவர்களிடம் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். இன்று ஓரளவு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இருந்தாலும் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எப்பொழுதும் போலவே எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்