மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் பலமடங்கு உங்களுக்கு நன்மை கொடுப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணிபுரிவீர்கள். இலக்கு நிறைவேறி உபரி பணவரவு இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் உழைப்பும் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் கொஞ்சம் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் இருக்கும்.
கௌரவம் அந்தஸ்து உங்களுக்கு உயரும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மட்டும் நல்லது. இன்று சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். இன்று வெளியூர் பயணத்தில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கலும் சிறப்பாகவே இருக்கும். கூடுமானவரை பண பரிவர்த்தனையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் எதுவும் பண்ணாதீர்கள். பணமும் கைமாத்தாக வாங்கிக் கொடுக்காதீர்கள். இதில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு செய்தால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். கூடுமானவரை சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்