தனது மாறுபட்ட கோணத்தில் சிந்தனை செய்வதில் வல்லமைமிக்க மீனராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயம் ஏற்படும். பாக்கிய விருத்தி ஏற்படும். இன்று சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பல வகைகளில் மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டுகளை கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் மகிழ்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்