மீனம் ராசி அன்பர்களே..!! உங்கள் சிரமத்தை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். அது மட்டுமில்லாமல் ரகசியங்களை தயவு செய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம். இஷ்ட தெய்வத்தின் கருணையால் நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான வளர்ச்சி இருக்கும். பணச் செலவில் சிக்கனம் இருப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையும் நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கூடுமானவரை எந்த ஒரு விஷயத்தையும் உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்வதுமிகவும் நல்லது. தயவுசெய்து இன்று நீங்கள் கோபப்படாதீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கொஞ்சம் கனிவாக பேசுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம்கூடும். உழைப்பு கொஞ்சம் கூடினாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. மேலதிகாரியிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். கோபத்தை தவிர்த்து விடுங்கள். அது போலவே இன்று உடலில் வசீகரத் தன்மை கூடுவதால் காதலில் வயப்பட்டகூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தினால் சிறப்பாக இருக்கும். திருமணம் கைகூடும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்