மீன ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் குடும்ப சிரமம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம். ரகசியங்களையும் அதுபோலவே யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழிலில் இலக்கை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பண செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள்களை தரம் அறிந்து உண்பது நல்லது. இன்று உறவினரின் வருகை இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். வழக்குகளிள் நிதானமான போக்கு காணப்படும்.
எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மையும் உண்டாகும். இன்று மனக்குழப்பம் நீங்கி மனம் தெளிவு பெறும். அதுமட்டுமில்லாமல் செயல்களில் கூடுதல் நிதி உருவாகும். இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் சொல்லும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அது போலவே எதிர்பாராத அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்ல படியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு