மீனம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தாரிடம் நீங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். உங்களுடைய மனைவி மீது நீங்கள் அளவற்ற அன்பு வைத்து இருப்பீர்கள். அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் நேர்த்தியான சூழல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளர் இடம் பேசும்போது மட்டும் நிதானமாக கடைபிடியுங்கள். இன்று கோபம் கொஞ்சம் தலை தூக்கினாலும் அன்பிற்கு எந்த குறையும் இருக்காது. கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பு இருக்கும் என்று சொல்வார்கள். அது போல தான் நீங்களும். மற்றபடி இன்று எந்த பிரச்சினையும் உங்களுக்கு இல்லை.
தன வரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆனால் ஆதாரத்துடன் தான் அது வந்து சேரும். அதற்கேற்றார்போல் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. உடல்நலம் ரொம்ப சிறப்பாக உள்ளது. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பு. இப்போதைக்கு புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு கொஞ்சம் முன்னேற்றமான சூழலில் வாழ்வது சிறப்பு. உங்களுக்கான நேரம் வரும்போது அதை விரிவுபடுத்தி கொள்வது ரொம்ப நல்லது. அதுபோலவே வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் நிதானமாகவும் பொறுமையாகவும் அலட்சியம் இல்லாமல் எதையும் செய்யுங்கள். வெளியூர் பயணத்தின்போது உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள்.
பயணங்கள் செல்லும்போது பேருந்தில் தூங்காமல் செல்வது ரொம்ப சிறப்பு. இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் அது போதும். இன்று மிக முக்கியமாக சக நண்பரிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு கூட சிறு சிறு பிரச்னைகள் வரக்கூடும். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம்கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடங்களை படிப்பது நல்லது. படித்த பாடத்தை நாங்கள் சொல்வது போலவே எழுதி பார்ப்பது மிகவும் சிறப்பு. இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்