Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “வெற்றி கிடைக்க பொறுமை தேவை”.. உங்கள் செயல் திறமை வெளிப்படும்..!!

மீனராசி அன்பர்களே…!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். வழக்கமாக செய்யக்கூடிய பணியை இன்று நீங்கள் மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். இன்று கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவு கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும்.

உங்கள் செயல் திறமை வெளிப்படும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாகவே இருக்கும். ஆதாய பணவரவு இருக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை, சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். சகோதர வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கவனமாக படியுங்கள். உழைத்து படியுங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் இன்று வழிபட்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |