Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “எதிர்ப்புகள் விலகிச்செல்லும்”.. அனைத்துமே சிறப்பாக நடக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிரியினால் உருவாக்கப்பட்ட சிரமம் செயலிழந்து போகும். எதிர்ப்புகள் உங்களிடம் இருந்து விலகிச்செல்லும். புதிதாக வருகிற பணியை திறம்பட செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.

எனவே கவனமாக இருப்பது நல்லது. இன்று ஓரளவு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழலும் இருக்கும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படகூடும். திருமண முயற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதே போல் பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

இன்று வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அங்கிருந்து வரக்கூடிய  தகவல் உங்களுக்கு நல்ல தகவலாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |