தெய்வ அருளை பரிபூரணமாக கிரகித்துக்கொள்ளும் மீனராசி அன்பர்களே..!! உங்களுக்கு உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். இன்று சக தொழில் சார்ந்த எவரிடமும் சச்சரவு பேசக்கூடாது. அதேபோல தொழிலில் உள்ள ரகசியத்தையும் பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் ஏற்படும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக நடக்கும்.
இன்று சொத்து விஷயங்களில் உள்ள முடிவுகள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். பொறுமையை கையாண்டால் இன்று சிறப்பை அடைய முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்