மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முன்யோசனையுடன் செயல்படுவது அவசியமாக படுகிறது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் செலவுகள் ஏற்படும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவால் உங்களுக்கு நித்திரை கெடலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்க செல்வது மிகவும் சிறப்பு. இன்று மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அவசியம். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமுகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் சிறப்பாக நடக்கும். திருமண முயற்சிகள் அனைத்தும் கைகூடும். இன்று பிள்ளைகளால் பெருமை உண்டாகும் .உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து ஏதும் வேண்டாம்.
இன்று உங்களுக்கு சந்தராஷ்டம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள் பார்த்துக்கொள்ளலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்