மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும் வெளிநாட்டு செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். பொறாமைகள் விட்டுச் செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.
இது போன்ற அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு இன்று சிறப்பாகவே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாகப் புரிந்துகொண்டு சங்கடப்பட நேரலாம். ஆகையால் எதை பற்றியும் கவலை வேண்டாம். பொறுமையை மட்டும் கையாளுங்கள், அதுபோதும். உங்களுடைய வாக்கு வன்மையால் அனைத்து விதமான நன்மையும் ஏற்படும். அதுபோலவே உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்விக்காக கொஞ்சம் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். அதேபோல விளையாட்டுத் துறையிலும் கூட உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்