Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “லாபத்தை அள்ளி கொள்வீர்கள்”… சந்தேகங்கள் நீங்கும்!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முழு மனதுடன் பணிபுரிவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். அளவான பணவரவு தான் கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். தெய்வ வழிபாடு மனதை சாந்தமாக  உருவாக்கும். இன்று புதிய தொழிலை ஆரம்பித்தவர்களுக்கு முதலீடுகளை திரும்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தை அள்ளி கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.

கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். சுணங்கி நின்ற காரியமும் சிறப்பாக நடக்கும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த காரியமும் சிறப்பாக இருக்கும். மனதில் நீங்கள் நினைத்தது நல்லபடியாகவே நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கலும் ரொம்ப சிறப்பாக நடக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |