மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் இலட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்விக்காகச் செலவு ஏற்படும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும்.
அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகத்தான் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் கூட நல்ல வழியாகவே நடந்து முடியும். இன்று எதைப்பற்றியும் கவலை வேண்டாம். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்.
தெய்வத்திற்காக சிறு தொகையை செலவிட வாய்ப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்