Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம்”…. பொறுமையாக இருப்பது நல்லது.!!

அதிக தெய்வபக்தி கொண்ட மீனராசி அன்பர்களே..!! இன்று ஓரளவு மகிழ்ச்சி குறையும் நாளாகவே இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் மனம் குழம்ப கூடும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. நாவில் கவனம் செலுத்தினால் நாணய பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.  வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொழுது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படக்கூடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்கக்கூடும். ஆகையால் மேலதிகாரியிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள்.

எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில்  முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். ஞாபகமறதி போன்றவை இருக்கும் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெறலாம். சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். சண்டை சச்சரவு வரும் என்பதால் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அல்லது முக்கியமான காரியங்களுக்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். தயவு செய்து இதனை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |