Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “வீண் செலவுகள் உண்டாகும்”…. மனம் ஓரளவு நிம்மதியாக இருக்கும்..!!

கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கொடுக்கக் கூடிய மீனராசி அன்பர்களே.!! இன்று ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும் இன்று அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இன்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மன கஷ்டம் கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாகவே இன்று நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். மனம் ஓரளவு நிம்மதியாகவே காணப்படும்.

முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டு படியுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் இன்று ஆர்வம் கூட்டுங்கள். இன்றைய  நாள் ஓரளவு மகிழ்ச்சி பெறும் நாளாக இருக்கும். நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்து செல்லுங்கள். அது மட்டுமில்லை காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து இதை மட்டும் முயற்சி செய்யுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம் நட்சத்திரம்

Categories

Tech |