ரிஷப ராசி அன்பர்களே …! இன்று அரசு உதவிகள் புதிய வேலைவாய்ப்பு கல்வியில் தேர்ச்சி என அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்யும் போது காரியங்கள் ரொம்ப சாதகமான பலனையே கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆயுதங்களைக் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.
வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். அடுத்தவர்களுக்கு உதவ போய் உங்கள் மேல் பழி குற்றம் ஏற்படலாம் கவனம் வேண்டும். உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். மற்றவரிடம் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். இன்று கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள் வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள் மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றை ஈடுபடுதல் அதே போல மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
காதலர்கள் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செயல்களில் நிதானம் வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும். அதே போல தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டாம். கணவன் மனைவி எதையும் புரிந்து கொண்டு பேசுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லதுங்க பச்சை எப்போதுமே உங்களுக்கு அது சத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.