மீன ராசி அன்பர்களே…!!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணி பணி புரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். ஆதாயம் பண வரவு கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையுமே இன்னைக்கு நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வாக்குவாதங்களை நீங்கள் மேற்கொண்டால் கொஞ்சம் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தாரிடம் அன்பாக பேசுங்கள் பிள்ளைகளிடமும் அன்பாக பேசுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் ரொம்ப அன்பாக நீங்கள் பேசவேண்டும். அக்கம்பக்கத்தினர் இடம் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். கூடுமானவரை இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு அமைதி பெறும். பிறகு காரியங்களை மேற்கொள்ளுங்கள் காரியம் சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இருந்தாலும் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.