மீனம் ராசி அன்பர்களே….!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்றுவது நல்லது. இன்று காரியத்தடை தாமதம் ஏற்படக்கூடும் , பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் , கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப பிரச்சனைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று முரட்டு தைரியம் மட்டும் வேண்டாம்.
அதுபோல யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்களை பெறக்கூடும். அதேபோல உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மட்டும் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு இன்று கல்வியில் கொஞ்சம் கவனம் வேண்டும்.பாடத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய செல்வ நிலையும் உயரும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்