மீன ராசி அன்பர்களே…!! இன்று கனிவாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். உத்யோகத்தின் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று மனதைரியம் கூடும்.
எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய திறமை இன்று ஏற்படும். வீண் குழப்பம், காரியதடை கொஞ்சம் இருக்கும். அதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். கவன தடுமாற்றம் ஏற்படலாம். பணவரவு பொருத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். இருந்தாலும் செலவு கொஞ்சம் கூடும், பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே ஓரளவு நெருக்கம் இருக்கும். குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு