Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”தொழில் சுமாரான அளவில் இருக்கும்”.. பண வரவில் தாமதம் இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் பல நலமும் பெறலாம். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில்  இருக்கும். பண வரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். இன்று எதிர்பார்த்த பண வரவு தாமதமாக இருக்கலாம்.

அதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம் வந்து சேர்ந்துவிடும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய சூழலும் இருக்கும். இன்று பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்லக்கூடும். அடுத்தவர்களின் உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |