Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “மன உறுதியுடன் செயல்படுவீர்கள்”… இன்று யோகமான நாள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகிச்செல்லும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். யோகமான நாளாக இருக்கும். இன்று நிதி நிலையும் உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பக்குவமாக பேசி பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை இன்று நல்வழிப்படுத்தும். மன உறுதியுடன் நீங்கள் செயல்படுவீர்கள் இன்று வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாகவே முடியும். இன்று கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நண்பரின் ஆலோசனைகள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுக்கும். பொறுப்புகள் உங்களுக்கு அதிகமாக இருப்பதால் உழைப்பும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கூட்டு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து தகராறுகள் நீங்கி செல்லும்.. இன்று தேவையில்லாத பயணங்கள் மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கொஞ்சம் வீண் அலைச்சலும் இருக்கும். நட்பால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடைபெறும். விட்டுப்போன சொந்தங்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். தொலைபேசி வழித் தகவல்கள் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று விடுவீர்கள். இன்று நீங்கள் ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். ஆனந்தம் கொள்ளும் நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை  எடுத்துக் கொண்டு செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். அதே போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |