கணினியின் வாயிலாக மட்டுமே பார்க்கக்கூடிய பிட்காயினை பிரபல நாடு வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பூர்வ பணமாக மாற்றியுள்ளது.
ஜப்பானியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினியின் வாயிலாக மட்டுமே பார்க்கவும் முடியும், பரிமாற்றம் செய்யவும் இயலும். எனவே இதுவரை இந்த பிட்காயின் நாணயத்தை எந்த ஒரு நாடும் சட்டபூர்வ பணமாக மாற்றவில்லை. இந்நிலையில் எல்சல்வடார் என்னும் மத்திய அமெரிக்க நாடு இந்த பிட்காயினை சட்டப்பூர்வமாக மாற்ற வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.
இதற்கு ஆதரவாக 62 வாக்குகள் விழுந்ததையடுத்து எல்சல்வடார் நாட்டின் அதிபரான நயீப் புக்கெல் பிட்காயின் நாணயத்தை சட்டபூர்வமாக மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்னும் 90 தினங்களில் அமெரிக்க டாலருடன் பிட்காயின் நாணயத்தையும் பயன்படுத்தலாம். இதனையடுத்து ஒரு பிட்காயினின் மதிப்பு சுமார் 27,16,000 என்று கூறியுள்ளார். மேலும் எல்சல்வடார் அரசாங்கம் ஒரு உலக வரலாற்றை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.