Categories
டெக்னாலஜி

கூகுளின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்…. விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்….. ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

கூகுளின் pixel 7 மற்றும் pixel 7 pro ஸ்மார்ட்போன்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகுள்ளது. அதேபோல் pixel போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த தகவலை கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஆனால் இதன் சரியான இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தியாவில் அக்டோபர் 6 அன்று துவங்கும் என தெரியவந்துள்ளது. இதே தகவலை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து இருக்கிறது. pixel 7 series மாடல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் october 6 அன்று 9.30 மணிக்கு flipkart தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  pixel 7 மாடலில் 6.3 inch FHD+OLED 90Hz refresh rate கொண்ட display, pixel 7 pro மாடலில் 6.7 inch QHD+ OLED 120 Hz refresh rate displayவழங்கப்படுகிறது. இரு போன்களிலும் display touching sensor, tensor G2 processor வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க pixel 7 pro மாடலில் 50MP primary camera, 12MP ultra wide lense, 48MP telephoto வழங்கப்படுகிறது. pixel 7 போனில் முந்தைய மாடலில் வழங்கப்பட்ட primary camera மற்றும் ultra wide lense கொண்டிருக்கிறது. pixel 7 series மாடலில் அதிகபட்சம் 12 GB RAM, 256 GB memory வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 4700 mah மற்றும் 5000 mah battery வசதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 33 watt fast charging மற்றும் wireless charging வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |