பியர்சோலா அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் இடமான பியர்சோலா அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக, கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையினால் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் அருவி அருகில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் வனத்துறையினர் கடந்த சில வருடங்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பியர்சோலா அருவியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.