பாஜகவின் மாநிலத்தலைவரான அண்ணாமலை, ஆளுநரின் பேச்சு, நமத்துப்போன பட்டாசு என்று கூறியிருக்கிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றிய சமயத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை ஆளுநரின் உறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மாநிலத்தின் ஆளுநர் உரையாற்றி தொடக்கி வைப்பது தான், பல காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், “ஆளுநரின் உரை, எப்போதும் ஆளும் கட்சி தயாரித்து கொடுத்து, அவர்களுக்கான அரசியல் அறிக்கையாகத் தான் ஆளுநரால் படிக்கப்படுகிறது. எனவே ஆளும் கட்சியின் எதிர்கால திட்டங்கள், இதில் வெளிப்படுவதால், எப்போதும் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் சமயத்தில் ஆளுநரின் உரைக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநர் படித்த உரை ஆளுங்கட்சிக்கானது. மேலும், முதலமைச்சரை பாராட்டக்கூடிய வாழ்த்துரையாகத்தான் இருக்கிறது. அதில், புதிதாக எதுவும் இருப்பதில்லை. சுமார் 50 வருடங்களுக்கும் அதிகமாக திமுகவினர், பேசியே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பேசியதையே பேசி, அரைத்த மாவைத்தான் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.